
லண்டன்:பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 93 வயதான தனது பாட்டியின் வினோதமான ஆசையான போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையை அவரது பேத்தி சர்ப்ரைசாக செய்து முடித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி பேர்ட்ஸ்(93). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேத்தி ஸ்மித்திடம் நிறைவேறாத ஆசை இருந்துள்ளது என கூறியுள்ளார். அது என்ன என்பதை கேட்டபோது, ஜோஷி கூறுகையில், 'என் வாழ்வில் அனைத்து சுகங்களையும் நான் கண்டுவிட்டேன். எந்தவித குறையும் இல்லை. அனுபவங்களும் நல்லதாகவே அமைந்தது.
ஆனால், நிறைவேறாத கடைசி ஆசை ஒன்று உள்ளது. என்னை ஒரு முறையாவது போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான். சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை உணர ஆவலாக இருக்கிறேன்' என கூறினார். பாட்டியின் மீது மிகுந்த பாசம் கொண்ட பேத்தி ஸ்மித், மான்செஸ்டர் காவல் நிலையம் சென்று தனது பாட்டியை கைது செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.
போலீசார் அப்படி செய்ய முடியாது என கூறி விட்டனர். ஆனால், இது அவரது கடைசி ஆசை என எடுத்து உரைத்திருக்கிறார். இதனை புரிந்துக் கொண்ட காவல்துறையினர் கைது செய்ய சம்மதித்துள்ளனர். இதனையடுத்து சர்ப்பிரைசாக ஜோஷியின் வீட்டிற்கு வந்து கைது செய்துள்ளனர். போலீசார் வருகையை கண்டதும் பாட்டியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
அவரது புன்னகையைப் பார்த்து போலீசாரும் நெகிழ்ந்துப் போனார்கள். இதனையடுத்து தனது பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி எனக் கூறி ஸ்மித் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment