வாஷிங்டன்:
ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாக்தாத் மற்றும்
எர்பில் நகரங்களில் உள்ள தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்
என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு
நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு
செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு பலன் இல்லை என்று
கூறிய ட்ரம்ப், கடந்த ஆண்டு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.
இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.
பொருளாதார சீர்குலைவு
அமெரிக்கா
விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது. ஈரான்
நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்தது. இதனால் ஈரானில்
மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன.
ஏவுகணை
இந்த
நிலையில் அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும்,
தளவாடங்களையும் ஈரானை தன் வழிக்கு கொண்டு வரும் வகையில் நகர்த்திவருகிறது.
பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா
அனுப்பியுள்ளது.
யுஎஸ்எஸ் ஆர்லிங்டன்
ஏற்கனவே
இந்தப் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன்
போர்க்கப்பல் தொகுதி உள்ளது. அதில் சேரும் வகையில் யு.எஸ்.எஸ். ஆர்லிங்டன்
விமானம் தாங்கி போர்கப்பலையும் அனுப்பியுது.
அமெரிக்கா தகவல்
கத்தார்
தளத்துக்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் போய்ச் சேர்ந்து விட்டன. ஈரான்
மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம்
என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை
அனுப்பி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
ஈரான் மறுப்பு
ஆனால்
இதை ஈரான் நிராகரித்து உள்ளது. ஆனால் மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா
தொடர்ந்து போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும்
அனுப்பி வைப்பதால் அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
நிலவி வருகிறது.
நாடு திரும்ப உத்தரவு
இந்நிலையில்,
ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க
தூதரகங்களில் அவசியமான பணிகளில் இல்லாத பணியாளர்கள் அனைவரும் உடனடியாக நாடு
திரும்புமாறு அமெரிக்க அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்
மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment