சேலம் மாநகர் பகுதிகளில்பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை சேலம் மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சேலம்
மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க சேலம் மாநகர காவல்
துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக பொது
மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து வரும் ரவுடிகளை கைது
செய்து சிறையிலடைக்கமாநகர காவல் துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில், இன்று
அதிகாலை முதல் சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில்
தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் கொள்ளை
வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 35க்கும் மேற்பட்ட ரவுடிகளை
சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர்கள்சேலம் மாநகர காவல் துறையினர் உதவியுடன் அதிரடியாககைது செய்தனர்.
சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர்கள்சேலம் மாநகர காவல் துறையினர் உதவியுடன் அதிரடியாககைது செய்தனர்.
குறிப்பாக கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி
உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்கொலை, கொள்ளை, வழிப்பறி
உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டரவுடிகளை போலீசார் கைது செய்து
சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
newstm.in
No comments:
Post a Comment