
பிரதமர் மோடி சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசியதற்கு பினராயி விஜயன்
பதிலடியை கொடுத்து பேசுகையில், பிரதமர் மோடி பேசுவது மிகவும் பச்சையான ஒரு
பொய்யாகும். இதுபோன்ற ஒரு தவறான கருத்தை பிரதமரால் எப்படி கூறமுடிகிறது? என
கேள்வியை எழுப்பினார். " பிற மாநிலங்களில் பிரதமர் மோடியை திருப்தி படுத்த
வேண்டும் என்பதற்காக சங்பரிவார் அமைப்பினர் சிறைக்கு செல்லாமல்
இருக்கலாம். ஆனால் அது கேரளாவில் நடக்காது.
சபரிமலை
விவகாரத்தில் மோடி அரசு இரட்டை வேடம் போடுகிறது. அனைத்து வயது பெண்களும்
கோவிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் போராட்டம்
நடத்தப்பட்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய படைகளையும் அனுப்ப
தயாராக உள்ளோம் என்றும் கூறியது," என்றார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து சபரிமலையில் போராட்டம்
நடைபெற்ற போது மத்திய அரசு தீர்வு காண தலையிட வேண்டும் என்று காங்கிரஸ்
வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment