
காஜிபூர்:
மத்திய இணை அமைச்சர் மனோன் சின்ஹாவின் மிரட்டல் பேச்சு உத்திரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா உத்திரப் பிரதேசம் மாநிலம் காஜிபூர்
மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் 3 முறை மக்களவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
காஜிபூரில் நடந்த தேர்தல்
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக தொண்டர்கள் மீது விரல்கள்
பட்டால், 4 மணி நேரத்தில் அந்த விரல்கள் இருக்காது.
ஊழலையும் சட்டவிரோத சொத்து சேர்க்கும் செயலையும் சமாதி கட்ட பாஜகவினர் தயாராக இருக்கின்றனர்.
பாஜக தொண்டர்களை நேருக்கு நேர் பார்க்க யாருக்காவது தைரியம் உண்டா? அப்படி பார்த்தால் அவர்களது கண்கள் இருக்காது என்றார்.
நேருவுக்கு
பதிலாக சர்தார் வல்லபாய் படேல் பிரதமராகியிருந்தால், நாட்டில் தீவிரவாதம்
இருந்திருக்காது என்று மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசியது சமீபத்தில்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்தபோது, தன்னை விவசாயி என்றும் சமூக சேவகர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment