
சென்னை:சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடிவடிக்கையில் 1.36 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாய்,
தோகா மற்றும் கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானங்களில் 1.36 கிலோ
தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானங்கள் வாயிலாக தங்கம் கடத்தப்படுகிறது
என்று அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி
சோதனையில் இறங்கினர்.
இதில் பயணிகள் கடத்திய வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 44 லட்சம். இது குறித்து மூன்று விமான பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment