
சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது
குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் இதுவரை ரூ.54.43 கோடி பணம், ரூ.74 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பிலான சேலை, லேப்டாப் மற்றும் குக்கர் உள்ளிட்ட பிற பொருட்களும் செய்யப்பட்டுள்ளது.
மேலும்
உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.54.43 கோடி பணத்தில் ரூ.19
கோடி உரியவர்களிடம் திருப்பி தரப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில்
சின்னம் பொருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும்.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது
குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். இவ்வாறு அவர்
கூறினார்.
முன்னதாக குக்கர் சின்னத்தை சுயேட்சை
வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம்
தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment