
லக்னோ: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால்
கண்டிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமராக பதவி ஏற்பார்
என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி
தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்
கட்சியின் கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக
பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று அவர் காங்கிரஸ் உத்தர பிரதேச
நிர்வாகிகள் இடையே பேசினார். தேர்தலில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது
குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
என்ன
என்ன பேட்டி
என்ன பேட்டி
பிரியங்கா காந்தி தனது பேச்சில், நாங்கள் தேர்தலுக்காக உளரவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக குறைந்தபட்ச ஊதிய
திட்டத்தை கொண்டு வருவோம். நாடு முழுக்க மக்கள் கடனாலும், ஏழ்மையாலும்
கஷ்டப்படுகிறார்கள். ஆனால் மோடிக்கு அது எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.
என்ன நிலைமை
இந்த தேர்தலில் நிலைமைகள் எங்களுக்கு
சாதகமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி சென்று கொண்டு
இருக்கிறது. காங்கிரஸ் வெற்றிபெற்றால் ராகுல் காந்திதான் பிரதமர்.
ராகுல்தான் கண்டிப்பாக பிரதமராக பதவி ஏற்பார்.
எனக்கு
தேர்தல்
எனக்கும் தேர்தலில் நிற்க விருப்பம்
இருக்கிறது. என்னை தேர்தலில் நிற்க சொன்னால் நிற்பேன். கண்டிப்பாக கட்சி
சொல்லும் இடத்தில் போட்டியிடுவேன். ஆனாலும் கூட எனக்கு கட்சிக்காக உழைக்கவே
அதிக விருப்பம். கட்சியை வளர்க்க வேண்டும்.
மோடி
மோடி மாற்றுகிறார்
பிரதமர் மோடி மக்களை பிரச்சனைகளில்
இருந்து திசை திருப்ப பார்க்கிறார். டிஆர்டிஓ செய்த சாதனையை அரசியலாக்க
பார்க்கிறார். மக்களுக்கு உண்மையாக இருக்கும் பிரச்சனைகள் தெரிய கூடாது
என்று இது போன்ற விஷயங்களை அவர் பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கிறார்.
source: oneindia.com
No comments:
Post a Comment