
டெல்லி : நூற்றுக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட பறக்கும்
படையை தேர்தல் ஆணையம் அமைத்திருக்கிறது. சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படும்
பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர்
நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 540 கோடி அளவுக்கு பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
இதில்
தமிழ்நாட்டில்தான் பணம் பறிமுதல் அதிகம். இங்கு மட்டும் ரூ. 107.24 கோடி
ரூபாய் பணம் பறிமுதல் ஆகியுள்ளது. இவை வாக்காளர்களுக்கு அளிக்கப்படவிருந்த
பணம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்தில்
ரூ. 104.53 கோடியும், ஆந்திராவில் ரூ. 103.4 கோடியும், பஞ்சாபில் ரூ. 92.8
கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தளவில் ரூ.
26.53 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ. 19.11 கோடியும், தெலங்கானாவில் ரூ.
8.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாதது
தொடர்பாக மொத்தம் ரூ. 539.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக
தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் நாடு
முழுவதும் மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த 10-ம்தேதி அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் நேற்று வரையில் மொத்தம் ரூ. 143.37 கோடி அளவுக்கு ரொக்கமும்,
ரூ. 89.64 கோடி அளவுக்கு மதுபானமும், ரூ. 131.75 கோடி அளவுக்கு போதைப்
பொருட்களும், தங்கம் மற்றும் ஆபரணங்கள் வகையில் ரூ. 162.93 கோடியும், மற்ற
இலவச பொருட்கள் என்ற வகையில் ரூ. 12.20 கோடியும் பறிமுதல் ஆகியுள்ளன.
நாடு
முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ம்தேதி தொடங்குகிறது.
வாக்குகள் மே 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment