
புதுச்சேரி: புதுச்சேரியில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, சிறுநீர் கழிக்கச் சென்றபோது அவரை துணை
ராணுவப்படையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மிகுந்த
பரபரப்பு ஏற்பட்டது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக
முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற
உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மூன்றாவது நாளாக
ஆளுநர் மாளிகை வெளியே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
காரணமாக ஆளுநர் மாளிகையை சுற்றியும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால்,
ஆளுநர் மாளிகையை சுற்றியும் 200 க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள்
குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தவிர மற்றவர்களை
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால்
கட்சி தொண்டர்களுக்கும் துணை ராணுவப் படையினருக்கும் தொடர்ந்து
வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள
சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி சிறுநீர் கழிப்பதற்காக அருகில் உள்ள
கழிவரைக்கு சென்றபோது, அவரை தடுத்து நிறுத்திய துணை ராணுவப்படை வீரர்கள்
வெளியே செல்ல அணுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம்
நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேர
வாக்குவாதத்திற்குப் பின்னர் அமைச்சர் கந்தசாமியை சிறுநீர் கழிக்க
பாதுகாப்புப் படையினர் அனுமதித்தனர். அமைச்சருக்கே இந்த நிலைமையா என்று
அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
No comments:
Post a Comment