ஆமதாபாத்: இனிமே ஆமதாபாத் இல்ல கர்னாவதி என்று பெயர் மாற்றம் செய்ய இருக்காங்க.
உ.பி.
மாநிலத்தில் அலகாபாத் நகரை பிரக்யாராஜ் எனவும், பைசாபாத் மாவட்டத்தை
அயோத்தி மாவட்டமாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் பெயர் மாற்றியதை
போன்று குஜராத் மாநிலத்தில் பழங்கால நகரான ஆமதாபாத் நகரை கர்னாவதி என
பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது.
காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் குஜராத் துணை முதல்வர் நிதின்படேல் பேசியதாவது:
பா.ஜ. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஆமதாபாத் நகரை பெயர் மாற்றிட திட்டமிட்டிருந்தது.
எவ்வித சட்ட சிக்கலும் இல்லாத நிலையில் பெயர் மற்றம்
செய்ய தடையில்லை. விரைவில் ஆமதாபாத் நகரம் கர்னாவதி என பெயர் மாற்றம் செய்ய
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment