உத்தர பிரதேசத்தில் உள்ள பைசாபாத், அயோத்யா என அறியப்படும் என்று
அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில்
நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட உத்தர
பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேசும் போது, ”அயோத்தி நமது பெருமை
மற்றும் கவுரவத்தின் அடையாளம்” என்றார்.
மேலும்,
அயோத்தியில் தசரத ராஜா பெயரில் மருத்துவக்கல்லூரி ஒன்றும், ராமர் பெயரில்
விமான நிலையமும் கட்டப்படும் என்றார். அலகாபாத் நகருக்கு பிரக்யாராஜ் என
பெயர் மாற்றி நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக உத்தர பிரதேச அரசு
அறிவித்த நிலையில், இந்த மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment