கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி
தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர்
கூறும்பொழுது, கர்நாடக மக்களுக்கு எதிரான திப்பு சுல்தானின் பிறந்த நாளை
கொண்டாட வேண்டிய அவசியமில்லை. குடகு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களை
கொன்று குவித்தவர் அவர்.
அவரை கொண்டாடுவது இந்துக்களை புண்படுத்துவது ஆகும். மைசூரு
உடையார்களை திப்பு சுல்தான் வீட்டு காவலில் வைத்தவர். அவரது பிறந்த நாளை
ஓட்டுக்காக கொண்டாட கூடாது.
இந்த கொண்டாட்டத்தில்
எந்தவொரு வன்முறை நடைபெற்றாலும் அதற்கு கர்நாடக அரசே பொறுப்பு ஏற்க
வேண்டும். நாங்கள் வருகிற 9ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டத்தில்
ஈடுபடுவோம். எங்களை அரசு கைது செய்யட்டும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment