
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் திக்ரி கிராமத்தில்
வசித்து வந்தவர் தரம்பால் (வயது 70). கடந்த அக்டோபர் 17ந்தேதி அடுக்கி
வைத்திருந்த செங்கற்கள் அருகே அவர் படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார்.
இந்த
நிலையில் சில குரங்குகள் செங்கற்கள் மீது குதித்து ஓடியுள்ளன. இதில் சில
செங்கற்கள் படுத்திருந்த தரம்பால் மீது சரிந்து விழுந்துள்ளன. இதனால் அவர்
காயமடைந்து உள்ளார். அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்
உயிரிழந்து விட்டார்.
ஆனால் தரம்பாலின் சகோதரர்
கிருஷ்ணபால் சிங் கூறும்பொழுது, தரம்பால் ஹோமம் வளர்க்க மர குச்சிகளை
எடுக்க சென்றார். அவரை சில குரங்குகள் தாக்கின. அவரது தலை மற்றும் நெஞ்சு
மீது அவை கற்களை கொண்டு வீசியுள்ளன. இதில் காயமடைந்த அவர்
மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார் என கூறினார்.
இதுபற்றி
எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை குரங்குகள் மீது நாங்கள் அளித்துள்ளோம்.
ஆனால் இது ஒரு விபத்து என்று போலீசார் கூறுகின்றனர் என்றும் அவர்
கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மூத்த அதிகாரிகளை சந்தித்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்க உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment