
அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு
பேருந்து ஓன்று நல்பாரி மாவட்டத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்து
விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
அசாம் மாநில அரசு பேருந்தில் சுமார் 50க்கும்
மேற்பட்ட பயணிகள் பார்பேட்டா நகரை நோக்கி பயணம் செய்தனர். மாலை 3.30
மணியளவில் நல்பாரி என்ற மாவட்டத்தின் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது ,
அடபாரி என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,
சாலையோரத்தில் இருந்த ஒரு குட்டைக்குள் பாய்ந்தது.
அந்த பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் அதிகமானோர் அருகில் உள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குட்டைக்குள் மூழ்கிய மேலும் சிலரை மீட்பதற்காக மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பேருந்து
ஓன்று நல்பாரி மாவட்டத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்து
விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர். அசாம் மாநில அரசு பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட
பயணிகள் பார்பேட்டா நகரை நோக்கி பயணம் செய்தனர். மாலை 3.30 மணியளவில்
நல்பாரி என்ற மாவட்டத்தின் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது , அடபாரி
என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில்
இருந்த ஒரு குட்டைக்குள் பாய்ந்தது. அந்த பேருந்தில் பயணம் செய்த 7 பேர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும்
அதிகமானோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குட்டைக்குள் மூழ்கிய மேலும் சிலரை மீட்பதற்காக மீட்புப்பணிகள் தீவிரமாக
நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை
மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment