

திருநெல்வேலி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையில் மூத்த
பேராசிரியராக பணிபுரிபவர் கோவிந்தராஜ்.
இவர் தனது தொடர்பியல் துறையில் படிக்கும் ஆராய்ச்சி
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மேலும் ஆராய்ச்சி
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவர் சங்கம் சார்பில் ஆடியோ
ஆதாரங்களுடன் பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து
இந்த குற்றசாட்டு குறித்து பல்கலைகழக துணைவேந்தரிடம் கேட்டபோது, பாலியல்
குற்றச்சாட்டுக்கு ஆளான மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் தற்போது மருத்துவ
விடுப்பில் இருப்பதாக தெரிவித்தார். பேராசிரியர் மீது உரிய விசாரணை
மேற்கொள்ள குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்
ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றசாட்டில்
முதல்கட்ட விசாரணையில் தகவல் உண்மையானது என உறுதி செய்யப்பட்டதன்
அடிப்படையில் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜை பணியிடை நீக்கம் செய்து
பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment