
அகமதாபாத்
தொழிலதிபர்கள் அதிகம் உள்ள குஜராத் மாநிலத்தில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளவர்கள் 58 பேர் உள்ளனர்.
குஜராத்திகள்
என்றாலே தொழிலதிபர்கள் அல்லது வர்த்தகர்கள் என அனைவரும் கூறுவதுண்டு.
அதற்கு ஏற்றார்போல் அங்குள்ள மக்களில் பலர் சொந்த தொழில் செய்து வருவது
குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் குஜராத்திகள் வேறு மாநிலங்களிலும் வர்த்தக
நிறுவனங்கள் நடத்துவது பலரும் அறிந்த ஒன்றாகும்.
நாடெங்கும்
உள்ள செல்வந்தர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில்
ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
அந்த பட்டியலில் குஜராத் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
அந்த மாநிலத்தில் 58 பேருக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது.
குஜராத்
மாநில செல்வந்தர்களில் அதானி குழும தலைவர் கௌதம் அதானி முதல் இடத்தில்
உள்ளார். அகில இந்திய அளவில் அவர் 8 ஆவது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து
ரூ.71200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அகமாதாபாத் நகரில் 49
கோடிஸ்வரர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குஜராத் செல்வந்தர்கள்
வரிசையில் 10 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நிர்மா குழுமம், டாரெண்ட்
குழுமம், உள்ளிட்ட செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஆவார்கள்.
No comments:
Post a Comment