கேரளாவில் வீடு புகுந்து திருடிய நகைகளை மனசாட்சி
உறுத்தியதால் திருடன் மன்னிப்பு கேட்டு உரியவரிடமே ஒப்படைத்த சம்பவம்
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம்
கொல்லத்தை சேர்ந்த மதுக்குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது
வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.
இந்நிலையில் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய மதுக்குமார், தனது
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பீரோவிலிருந்து 2 லட்சம்
ரூபாய் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து
மதுக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு
செய்து நகை திருடிய திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மதுக்குமார் தனது வீட்டின் கதவை திறந்து
பார்த்த போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வெளியே
திருடுபோன நகையும் ஒரு லெட்டரும் இருந்தது.
அந்த லெட்டரை, நகைகளை திருடிச்சென்ற திருடனே எழுதி இருந்தான். அந்த
கடிதத்தில் என்னை மன்னிக்கவும். பணக்கஷ்டத்தால் உங்கள் நகைகளை திருடி
சென்றேன். இருந்தபோதிலும் வீட்டிற்கு சென்ற என்னால் நிம்மதியாக தூங்க
முடியவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் தான் உங்கள் நகைகளை உங்களிடமே
ஒப்படைத்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் என அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து மதுக்குமார்
அந்த நகைகளுடன் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரங்களை கூறினார்.
கம்ப்லைண்ட்டை வாபஸ் பெறுவதாக மதுக்குமார் தெரிவித்தார். இருந்தபோதிலும்
போலீஸார் அந்த திருடனை தேடி வருகின்றனர்..
கேரளாவில் வீடு புகுந்து
திருடிய நகைகளை மனசாட்சி உறுத்தியதால் திருடன் மன்னிப்பு கேட்டு உரியவரிடமே
ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்
கொல்லத்தை சேர்ந்த மதுக்குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது
வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.
இந்நிலையில் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய மதுக்குமார், தனது
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பீரோவிலிருந்து 2 லட்சம்
ரூபாய் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து
மதுக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு
செய்து நகை திருடிய திருடனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை
மதுக்குமார் தனது வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அவருக்கு ஒரு இன்ப
அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வெளியே திருடுபோன நகையும் ஒரு லெட்டரும்
இருந்தது. அந்த லெட்டரை, நகைகளை திருடிச்சென்ற திருடனே எழுதி இருந்தான்.
அந்த கடிதத்தில் என்னை மன்னிக்கவும். பணக்கஷ்டத்தால் உங்கள் நகைகளை திருடி
சென்றேன். இருந்தபோதிலும் வீட்டிற்கு சென்ற என்னால் நிம்மதியாக தூங்க
முடியவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் தான் உங்கள் நகைகளை உங்களிடமே
ஒப்படைத்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் என அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மதுக்குமார் அந்த
நகைகளுடன் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரங்களை கூறினார்.
கம்ப்லைண்ட்டை வாபஸ் பெறுவதாக மதுக்குமார் தெரிவித்தார். இருந்தபோதிலும்
போலீஸார் அந்த திருடனை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment