கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியாக காரணமாக இருந்த
பயிற்சியாளர் ஆறுமுகம் கொடுத்த ஆவணங்கள், முகவரி எல்லாம் பொய்யானது
என்றும், அவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை செய்யவில்லை என்றும்
தகவல் வெளியாகி உள்ளது.
கோவை அருகே இருக்கும் தொண்டாமுத்தூர்
பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியில் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரிடர்
மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி
உள்ளார்.
மாடியில் இருந்து பயிற்சியாளர் மூலம் அவர் தள்ளிவிடப்பட்டு
இறந்து இருக்கிறார். மாடியில் இருந்து கீழே விழும் போது மாணவியின் தலை
மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார்.
கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த
நிலையில் மாணவியை தள்ளிவிட்ட பயிற்சியாளர் ஆறுமுகம் குறித்த சில
முக்கியமான தகவல்கள் வெளியாகி. அவரை கோவை போலீஸ் தீவிரமாக விசாரித்து
வருகிறது.
அதன்படி, கோவை மாணவியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம்
தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் இல்லை.கைதான ஆறுமுகம் மத்திய மாநில
அரசின் ஊழியர் கிடையாது.பேரிடர் மேலாண்மை பற்றி முறையாக அவர் பயிற்சி
பெறவில்லை.
மாற்றுத்திறனாளி ஆறுமுகம் எப்படி பயிற்சியாளர் ஆனார்
என்று விசாரணை நடக்கிறது. ஆறுமுகம் பணி செய்ய அளித்த ஆவணங்கள் எல்லாம்
போலியானது என்று கூறப்படுகிறது. அதேபோல் அவரது வீட்டு முகவரி கூட தவறானது
என்றும் கூறியுள்ளனர்.
ஆறுமுகத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை
நடந்து வருகிறது. 2017ல் ஒரு முறையும், 2018 ஜூலை 3ம் தேதியும் கோவை
கல்லூரியில் அனுமதி கோரி கடிதம் கொடுத்துள்ளார். கடைசியாக தற்போது வீடியோ
காட்டி, கல்லூரியில் பயிற்சி அளிக்க வந்துள்ளார்.
இவருடன் வந்த நபர்கள் குறித்தும் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இதை குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment