சாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் (WFC) நடத்தும் 8 வது ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் கடந்த ஏப். 27 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், அத்திக்கடை, பொதக்குடி உட்பட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில், அதிரை WFC, ஒரத்தநாடு, அதிரை AFFA, திருச்சி ஆகிய 4 அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை WFC, திருச்சி அணிகள் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தனர். பின்னர், ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டன. இதில், 5-4 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், பி.எம்.கே தாஜுதீன், ம.செ ஜபருல்லாஹ், சம்சுல் மன்சூர், உடற்கல்வி முன்னாள் ஆசிரியர் ராமச்சந்திரன், கால்பந்தாட்ட பயிற்சியாளர் லியாகத் அலி, எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான், அதிரை அகமது ஹாஜா, மதுக்கூர் கலாம், ஜபருல்லா, கனி, சபீர், அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, அப்ரீத்கான் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை, அதிரை அகமது ஹாஜா தொகுத்து வழங்கினார். ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், ராஜகோபாலன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.
இதன் பின்னர், பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடர் போட்டியில் சாம்பியன்
பட்டம் வென்ற அதிரை WFC அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை
பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற திருச்சி அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம்
மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட்டன. மேலும், தொடர் போட்டிகளில் 6
கோல் அடித்து சிறந்த ஆட்ட நாயகனாக அதிரை AFFA அணி நட்சத்திர வீரர் ஆசிப்,
சிறந்த கீப்பராக திருச்சி அணி வீரர் விக்கி, சிறந்த பார்வர்ட் அதிரை WFC
அணி வீரர் முகமது இம்ரான், சிறந்த ஆல் ரவுண்டர் அதிரை WFC அணி வீரர்
ஹாரிஸ், சிறந்த ஸ்டாப்பர் திருச்சி அணி வீரர் ஹரி ஆகியோருக்கு சிறப்பு
பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் விழாவில், மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை நிகழ்த்திய
உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி
கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுப் பிரியர்கள் பலர்
கலந்துகொண்டனர்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment