
புதுடில்லி: நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை
(15ம் தேதி) நடக்கவுள்ளது. மேலும் முடிவுகள் காலை 9 மணிக்கு மேல் வெளியே
வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகள் துல்லியமாக
கூறப்படாததால் சஸ்பென்ஸ் அதிகரித்துள்ளது.காங்கிரஸ் கட்சியே ஆட்சி
அமைக்கும் என காங்., தரப்பில் பலமாக நம்பப்படுகிறது. இதனால் நாளை ஓட்டு
எண்ணிக்கை மற்றும் முடிவுகள் குறித்து பார்வையிடுவதற்காக காங்., கட்சியின்
மூத்த நிர்வாகிகள் அங்கு புறப்பட்டுள்ளனர்.குலாம் நபி ஆசாத், அசோக்கெய்லாட்
மற்றும் சிலர் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் பெங்களூரு செல்ல கட்சி
மேலிடம் பணித்துள்ளது.
No comments:
Post a Comment