புதுடில்லி : முன்னாள் பிரதமர், லால் பகதுார் சாஸ்திரி, மர்மமான முறையில்
இறந்தது தொடர்பாக, 1977ல் அமைக்கப்பட்ட, ராஜ்நாராயண் கமிட்டி ஆவணங்களை
வெளியிடும்படி, பிரதமர் அலுவலகம், மத்திய வெளியுறவுத்துறை, உள்துறை
அமைச்சகங்களுக்கு, சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. தகவல் உரிமை: கடந்த, 1965ல், இந்தியா - பாக்., இடையிலான
போருக்கு பின், அப்போதைய பிரதமர், லால் பகதுார் சாஸ்திரி, 1966ல், அப்போதைய
சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த உஸ்பெகிஸ்தானின், தாஸ்கன்ட் நகர்
சென்றார். அங்கு, அப்போதைய, பாக்., அதிபர், முகம்மது அயூப் கானுடன்,
முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில், சாஸ்திரி கையெழுத்திட்டார்.
சில மணி நேரத்தில், மர்மமான முறையில், சாஸ்திரி உயிரிழந்தார்.இது தொடர்பாக
விசாரிக்க, 1977ல், ராஜ் நாராயண் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த
கமிட்டி சேகரித்த ஆவணங்களை வெளியிடக்கோரியும், சாஸ்திரியின் உடல் தகனம்
செய்யப்பட்ட இடம் பற்றிய தகவலை தெரிவிக்கக் கோரியும், மத்திய தகவல்
ஆணையத்தில், தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. ஆவணங்கள் : இதையடுத்து,
சாஸ்திரி மரணம் தொடர்பான, ராஜ் நாராயண் கமிட்டி ஆவணங்களை வெளியிடும்படி,
பிரதமர் அலுவலகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய உள்துறை
அமைச்கம் ஆகியவற்றுக்கு, தகவல் ஆணையர், ஸ்ரீதர் ஆச்சார்யலு
உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment