பெங்களூரு: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது காங்கிரஸ்,
மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணிக்கு தற்போது உள்ள எண்ணிக்கையை விட ஒரு இடம்
குறையும்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை
கிடைக்கவில்லை. பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ்
2வது இடத்தையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. 2
சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜகவுக்கு சட்டசபையில் உள்ள பலம்
104. இது பெரும்பான்மை பலத்துக்கு 8 இடங்கள் குறைவாகும். அதேசமயம்,
மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 116 ஆகும்.
இதுபோக 2 சுயேச்சைகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.
இதையும் சேர்த்தால் 118 வருகிறது. இது பெரும்பான்மையை விட 6 இடங்கள்
கூடுதலாகும்.
ஆனால் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் குமாரசாமி 2
தொகுதிகளில் (ராம் நகர், சென்னபட்டனா) போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே
சட்டசபையில் வாக்கெடுப்பு வரும்போது அவர் ஒருமுறைதான் வாக்களிக்க முடியும்.
அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 117 பேரின் ஆதரவே வரும்.
இருப்பினும் இதனால் இக்கூட்டணிக்கு நஷ்டம் கிடையாது என்பது
குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
No comments:
Post a Comment