போபால் : தண்ணீர் பஞ்சம் காரணமாக மத்தியபிரதேசத்தில் அரசு பள்ளி
மாணவிகள் தினமும் கழிப்பறைக்காக நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல
நிலை காணப்படுகிறது.
மத்தியபிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள
அரசு விடுதி ஒன்றில் தங்கியுள்ள மாணவிகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில்
கழிப்பறை செல்வதற்கே பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தண்ணீர் பஞ்சம்
காரணமாக தினமும் சுமார் 4 கிமீ தொலைவு நடந்து சென்று கழிப்பறையை அவர்கள்
பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் துணையுடன்
அவர்கள் கையில் வாளியுடன் நடந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருக்கின்றது.
இதுகுறித்து,
சம்பந்தப்பட்ட அந்த விடுதியின் காப்பாளர் கூறுகையில்,' கோடை காலத்தில்,
தண்ணீர் பஞ்சம் இருப்பது வழக்கம் தான்.
எப்போதும் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகிப்பர். ஆனால்,
இந்த ஆண்டு அதுவும் இல்லை. இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தும்,
இதுவரை நடவடிக்கை இல்லை' என வருத்தம் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில்
இரண்டு போர்வெல்கள் உள்ளன. ஆனபோதும், அவை கோடை காலத்தில் வறண்டு விடுவதால்
அம்மாணவிகள் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
source: oneindia.com

No comments:
Post a Comment