நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்,
வருகைபுரியாதவர்களுக்காக சிறப்பு துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 25-ந்
தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள்
தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க
முடியும். தனியார் கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வுமையங்களுக்கு
நேரில் சென்று நாளை (புதன்கிழமை) முதல் ஜூன் 2-ந் தேதி வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
ஹால் டிக்கெட்டுகளை
(தேர்வுக்கூட அனுமதி சீட்டுகள்) இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். அதற்கான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு எழுதுபவர்
தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை ஹால் டிக்கெட்டில் தெரிந்து
கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வு எழுத தற்போது வழங்கப்படும் அனுமதி
தற்காலிகமானது. தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு
செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment