சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில்
நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வரும் , துணை முதல்வரும்
பங்கேற்றுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து
அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் 19 நாட்களாக போராட்டத்தில்
ஈடுபட்டனர். எனினும் மத்திய அரசு பிடிகொடுக்கவில்லை.
இதனால்
காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் மற்றும்
புதுவையில் ஏப்.3-ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த
போவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
32 மாவட்டங்கள் மாவட்ட தலைநகரங்களில்... .மாவட்ட
அமைச்சர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் என 32 மாவட்ட தலைநகரங்களில்
உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை கூறியிருந்தது.
மேலும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வோர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில்
முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் பெயர்கள் இல்லாததால் அவர்கள் இருவரும்
கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்பட்டது.
சேப்பாக்கத்தில் இன்று மூத்த நிர்வாகிகள் பங்கேற்பு இந்நிலையில்
சேப்பாக்கத்தில் அதிமுக இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கியது.
இதில் கோகுல இந்திரா, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் ஈபிஎஸ் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு இதையடுத்து
அதிமுக சார்பில் போடப்பட்ட உண்ணாவிரத பந்தலில் திடீரென காலை 8 மணிக்கு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து அமர்ந்தார். அவரது பெயர் நிர்வாகிகள்
பட்டியலில் இல்லாத நிலையில் அவர் பங்கேற்றது அங்கிருந்தவர்களுக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறிது நேரத்தில் துணை முத்லவர் ஓ.
பன்னீர் செல்வமும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்தார்.
முக்கியத்துவம் உண்ணாவிரதம் இருவரும்
மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது. சென்னையில் 5000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்டுள்ளதால் இன்னும் ஏராளமான நிர்வாகிகள்
உண்ணாவிரதத்தில் பங்கேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment