
நிர்மலா தேவி விவகாரத்தில்
தொடர்புடைய முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி
போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாலியல் புகாரில் கைதான
பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின்
முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் துணை பேராசிரியர் முருகன்
ஆகியோரது தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி
தெரிவித்தார். மேலும் இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு
உண்டு எனக்கூறிய அவர், அவர்களது பெயர் விவரங்களைத் தெரிவிக்க
மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment