
புதுடில்லி :மாநில கட்சிகளுக்கு காங்.,உதவ வேண்டும் என மேற்கு வங்க
முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
காங்.,மூத்த தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பல்வேறு
எதிர்கட்சிகளை சந்தித்து வரும் மம்தா பானர்ஜி இன்று புதுடில்லியில்
காங்கிரஸ் கட்சியின் சோனியாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து
செய்தியாளர்களிடம் பேசிய அவர் சோனியாவின் உடல் நிலையை கேட்டறிந்தேன்.
இருவரிடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இருவரும் தற்போதைய அரசியல்
சூழ்நிலைகள் குறித்து பேசினோம். மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் உதவ வேண்டும்
என தான் விரும்புவதாக கூறினார்.மூன்றாவதுஅணிக்கான முயற்சியில் இறங்கியுள்ள
மம்தா ஏற்கனவே சரத்பவாரை சந்தித்தார்.
மேலும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment