``ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடிவிட முடியாது. அதன் பாதிப்புகள் பற்றி
தமிழக அரசு ஆய்வு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்" என்று அமைச்சர்
ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதப்படுத்த கர்நாடக தேர்தல் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை அ.தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொழிற்சாலை தி.மு.க ஆட்சியில்தான் திறக்கப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு பின்னால் தி.மு.க. உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடிவிட முடியாது. அதன் பாதிப்புகள் பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்.

தி.மு.க.வில்
எம்.பி-க்கள் இல்லாததால், அ.தி.மு.க எம்.பி-க்களை ராஜினாமா செய்ய தி.மு.க
வலியுறுத்துகிறது. அதிமுக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள்.
பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுப்பார்கள்.
காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்தபோது, சட்டரீதியாக காவிரி நீரைப்
பெற்றுக்கொடுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் காங்கிரஸும், தி.மு.கவும்
இரட்டை வேடம் போடுகிறது'' என்றார்.
No comments:
Post a Comment