
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் அடுத்த கட்ட
நடவடிக்கை என்ன என்று தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர்
செங்கோட்டையன் மற்றும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற
தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதததால் தமிழக மக்கள்
மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். இந்த விஷயத்தில் பொறுத்திருப்போம் என்று
சொன்ன தமிழக அரசும் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது
என்று தமிழகமே எதிர்பார்த்துக் கிடக்கிறது.
ஆனால் காலக்கெடு முடிந்த
போதும், தமிழக அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நாளை அதிகாரப்பூர்வ நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று
தெரிகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எந்த முடிவாக
இருந்தாலும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிவித்துவிட்டார்.
சென்னை
விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை
அமைச்சர் சி.வி. சண்முகம், காவிரி பிரச்னையில் மத்திய அரசு முடிவை
தெரிவித்த பின் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலாண்மை வாரியம் அமைய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று
கூறியவர் காலக்கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து
முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
source: oneindia.com
No comments:
Post a Comment