
.. .கா வல் பணியில் உள்ள
ஐ.பி.எஸ்.சுக்கு மட்டுமல்ல, ஓய்வு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் 'இதர பணிகள்'
என்ற பெயரில் 'ஆர்டர்லி' கள் இருக்கிறார்கள்... என்பது காவலர்கள் முன்
வைக்கும் குற்றச்சாட்டு. விவகாரம் கோர்ட்டுக்குப் போனதும், 'ஆர்டர்லி பணி
என்பது இல்லவே இல்லை' என்று, காவல் அதிகாரிகள் அங்கே பதில் தருகின்றனர்.
... ஆர்டர்லிகள் போலவே காவலர், தலைமைக் காவலர்கள் மீது அதிகாரத்தை
வன்மையாகச் செலுத்தும், இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் லெவல்
அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்கிறார்கள் கீழ்மட்ட காக்கிகள். நம்மிடம்
பேசிய காக்கிகள் ஒரு சம்பவத்தைச் சொன்னார்கள்.
"ரிகபஷா வாகனப் பயன்பாடு சென்னையில் அதிகம். காவல் உரிமம் பெற்ற 1,500 ரிகபஷாக்கள் சென்னையில் புழக்கத்தில் உள்ளன. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர்கள் என ரிகபஷாக்களுக்கு உரிமம் வழங்கும் பிரிவில் பலர் பணியாற்றுகின்றனர். காவல்துறையில் இன்னமும் 'ஹாக்னி விங்' என்ற பிரிவு ரிகபஷாக்களுக்கு லைசென்ஸ் கொடுக்க மட்டுமே இயங்கி வருகிறது. இது, பணிச்சுமை அதிகம் இல்லாத 'விங்' (பிரிவு) என்பதால் இன்ஸ்பெக்டர் தவிர, பெரும்பாலும் உடல் ஆரோக்கியம் குறைந்தவர்களே, விரும்பிக் கேட்டு இங்கு வேலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட காக்கிகளின் பரிதாபநிலையைத் தங்களுக்குச் சாதகமாக, மேலதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த கீழ்நிலைக் காக்கிகளுக்குக் கிடைக்கக் கூடிய உணவுப்படி கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. 'உனக்கே முட்டி செத்துப்போய்தான், இங்கே டியூட்டிக்கு வந்திருக்கே... நாலு இடம் ஓடியாடி அக்யூஸ்ட்டைப் பிடிக்க முடிந்தால், ஏன் ரிகபஷாவுக்கு டோக்கன் கொடுக்கற வேலைக்கு வரணும்?. மாசம் முப்பது நாளும் சும்மாவே வந்து உட்கார்ந்து, சம்பளம் வாங்கிட்டுப் போற... இதில் உணவுப்படிதான் ரொம்ம்ம்ப முக்கியம்' என்று அதிகாரிகள் கேவலப்படுத்துவதால் உணவுப் படியை வாங்க 'சம்திங்' வெட்டுகிற நிலைமை இருக்கிறது. நாங்கள் இதைக் கொடுக்கா விட்டால், ஆன் டியூட்டி என்பது ஆஃப் டியூட்டியாக, அதிகாரிகளால் மாற்றப்பட்டு விடும். எங்கள் நிலையைப் பார்த்து மேலதிகாரிகள், மட்டமாக அடிக்கும் கமெண்ட்டும், எங்களைக் கொல்கிறது. முதல்வருக்குப் புகார் அனுப்பினால் ஏதாவது நடவடிக்கை இருக்குமா சார்" என்ற எதிர்பார்ப்புக் கதறல், இங்கே அதிகமாகவே கேட்கிறது. உள்ளுக்குள்ளேயே அழுது வடிகிறார்கள், இங்கு பணியாற்றும் காக்கிகள்.
No comments:
Post a Comment