கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மகாராஷ்டிராவில் இடதுசாரி முன்னணி ஆதரவு விவசாயிகள் சுமார்
50,000த்துக்கும் மேற்பட்டவர்கள் நாசிக்கில் துவங்கி நடைபயணமாக இன்று
அதிகாலை மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் வந்து சேர்ந்தனர். அவர்கள் பல
குழுக்களாக பிரிந்து மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் மாநில
அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
கடந்த
5 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலில் நடந்து, சாலை மற்றும்
ஆற்று ஓரங்களில் தங்கியிருந்து, வெட்ட வெளியில் படுத்து உறங்கி, டிரம்களை
இசைத்து, பாட்டுக்கள் பாடி, ஆண்கள், பெண்கள் என்று மகாராஷ்டிரா அரசின்
கதவைத் தட்ட வந்து சேர்ந்தனர்.
இந்த விவசாயிகள் கேஜே சோமையா மைதானத்தில் குவிந்துள்ளனர். இன்னும்
ஏராளமான விவசாயிகள் மும்பை நோக்கி தொடர்ந்து வண்ணம் உள்ளனர். இதனால்
விவசாயிகளின் எண்ணிக்கை 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை உயரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிவாசிகளின்
நிலங்களை விவசாயிகளுக்குத் தர வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய
வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிபட
தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் குறைகள் கேட்டறிந்து
நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் உறுதி
அளித்துள்ளார்.
எங்கள் போராட்டத்தால் மும்பை நகரில் எந்தத்
தொந்தரவும் ஏற்படாது. எங்கள் கோரிக்கைகள் குறித்து முதமைச்சர் தேவேந்திர
பட்னாவிசிடம் பேசுவதாக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறியுள்ளனர். எங்கள்
போராட்டம் அமைதியான முறையில் நடக்கும். அதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது என்றார்.
மகாராஷ்டிராவின்
சிபிஎம் விவசாயிகள் அமைப்பு இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்து இருந்தது
என்றாலும், நடப்பாண்டில் மகாராஷ்டிரா அரசு பார்த்திராத ஒரு பிரம்மாண்ட
பேரணியாக அமைந்துள்ளது. பேரணியைப் பார்த்த மராட்டிய பாஜக அரசு மிரண்டு
போயுள்ளது. விவசாயிகள் என்றால் அவர்களை கொஞ்சம்கூட கண்டுகொள்ளாத மத்திய,
மாநில அரசுகளுக்கு இந்த பேரணி கிலியைக் கிளப்பியுள்ளது என்றே சொல்ல
வேண்டும்.

No comments:
Post a Comment