கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் தற்குறிப்பு விவரங்கள்
எதுவுமின்றி, விதிமுறைகளை மீறி வங்கி கணக்குகளை தொடங்கி முறைகேடு செய்த
ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து
உத்தரவிட்டுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடம்
சிம் கார்டு விற்பனை செய்யும் போது அடையாள அட்டையாக ஆதார் நகலை பெரும்,
அப்போது வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இன்றி ஏர்டெல்
பேமென்ட் வங்கி கணக்கை தொடங்கியுள்ளது. இதன்மூலம் தனது
வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய 47 கோடி ரூபாய் அளவுக்கான அரசின் மானிய
தொகையை ஏர்டெல் நிறுவனம் தனது வங்கி கணக்கிற்கு திருப்பிவிட்டுள்ளது.
கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் தற்குறிப்பு விவரங்களை
சேகரிக்கால், வெறும் ஆதாரை மட்டுமே வைத்து வங்கி கணக்கு தொடங்கியதை
கண்டறிந்த ரிசர்வ் வங்கி, ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு 5 கோடி ரூபாய்
அபராதம் விதித்துள்ளது. இதேபோன்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை
பின்பற்றாது செயல்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு 40 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ்
வங்கிக்கு 3 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 2 கோடியும் அபராதம்
விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

No comments:
Post a Comment