
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு
எண்ணிக்கை
ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் வெற்றி
பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
மேகாலயாவில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணப்படுவதை
முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
47 இல் பாஜக போட்டி
மொத்தம் 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளிலும்
போட்டியிட்டது. பாஜக 47 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.
என்பிபி பாஜக கூட்டணி
என்பிபி எனும் நாகா மக்கள் கட்சி 52 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.
என்பிபியும் பாஜகவும் மத்தியிலும் மணிப்பூரிலும் கூட்டணியில் உள்ளன.
0 ஆண்டுகளாக காங்.
இந்நிலையில் மேகாலயா சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் எதிரெதிராக களம்
கண்டன. மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் கடந்த 10
ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.
காங். அதிக இடங்களில்
இந்நிலையில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
வது இடத்தில் என்பிபி
என்.பி.பி எனும் நாகா மக்கள் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
மற்றவை 17 இடங்கள்
பாஜக வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மற்றக்கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தில் முன்னிலை வக்கிறது.
தொங்கு சட்டசபை
எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றாததால் மேகாலயாவில்
தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அல்லது காங்கிரஸ், என்பிபி
கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றும் அல்லது பாஜக, என்பிபி, மற்றும்
மற்றவை கிங்மேக்கராக செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment