
மாசு கட்டுப்பாட்டில் இருந்து உலக அதிசயமான தாஜ்மகாலை பாதுகாக்கும்
விதமாக அதனை பார்வையாளர்களுக்கு அனுமதி நேரத்தில் கட்டுப்பாடு விதிக்க
இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. உ.பி., மாநிலம் யமுனை
நதிக்கரையில் அமைந்துள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார்
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் 15
வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது
வரை நுழைவு கட்டணம் வசூலித்து வந்தபோதிலும் நேரக்கட்டுப்பாடு என்பது இல்லை.
சமீப காலமாக தாஜ்மஹால் தன்னுடைய பொலிவை இழந்து வருவதாக சுற்றுலா பயணிகள்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை மாநில அரசுக்கு அளித்துள்ள நோட்டீசில்
வரும் ஏப்.,1-ம் தேதி முதல் தாஜ்மஹாலுக்கு வரும் பார்வையாளர்களுக்கு மூன்று
மணி நேரம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் மனித மாசுபாட்டில்
இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க முடியும். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு
மேல் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். இவ்வாறு
பரிந்துரைத்துள்ளது.
No comments:
Post a Comment