
கலப்பு திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர் மரணமடைந்த சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா? அல்லது ஆணவக் கொலையா? முறையாக
விசாரிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் சேர்ந்தவர்கள்
காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
அரியலூர்
மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காமராஜபுரத்தைச் சேர்ந்த தாய், தந்தை இல்லாத
ஜெகதீஸ்வரி மற்றும் காரைக்குறிச்சியைச் சேர்ந்த வீரத்தமிழன் இருவரும் 4
மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்
செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் நேற்று
இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.
கலப்பு திருமணம் செய்துகொண்ட மாணவி ஜெகதீஸ்வரி பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்தவர். இவர் பாராமெடிக்கல் கல்லூரியில் நர்சிங் படித்து
வந்துள்ளார். இடைநிலை சாதியைச் சேர்ந்த வீரத்தமிழன் டிப்ளமோ படித்து
வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதலித்து
வந்துள்ளனர். இந்நிலையில் 4 மாதத்திற்கு முன்பு பெண்ணிற்கு 17 வயது ஆன
நிலையில் இருதரப்பு பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கலப்பு
திருமணம் செய்துகொண்டனர்.
இதனை அறிந்த வீரத்தமிழன் மற்றும்
ஜெகதீஸ்வரியின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
புகார் கொடுத்ததின் பேரில் போஸ்கோ ஆக்ட் மூலம் வழக்கு பதிந்து வீரத்தமிழன்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1 மாதம் கழித்து
வெளியில் வந்த வீரத்தமிழன் ஜெகதீஸ்வரியை மீண்டும் சந்தித்து அழைத்து சென்று
இரு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் இருவரும் 3 மாதம் கழித்து
நேற்று விஷமருந்தியுள்ளனர். அதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம்
அரசு மருத்துவமனைக்கு சிச்சைக்கு அழைத்து வந்தபோது ஜெகதீஸ்வரி சிகிச்சைப்
பலன் அளிக்காமல் இறந்து விட்டார், வீரத்தமிழன் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே
பரிதாபமாக இறந்து விட்டார்.
இதனையடுத்து, காவல்நிலையத்தை
முற்றுகையிட்ட விடுதலைச் சிறுத்தைகள் தரப்பினர் பேசும்போது, 'இருவரும்
திருமணம் செய்துகொண்டது பிடிக்காமல் மாப்பிள்ளை விட்டாரின் தூண்டுதலால்
இறந்துவிட்டரா என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது. மூன்று மாதம் ஒன்றாக
வாழ்ந்த பிறகு இன்று விஷம் குடிக்க என்ன காரணம்? எங்கு விஷம்
குடித்தார்கள்? யார் 108-க்கு தகவல் கொடுத்தது. இது தற்கொலையா? அல்லது
ஆணவக் கொலையா? என்பது மர்மமாக உள்ளது. இதனை முறையாக விசாரிக்கவேண்டும்'
என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment