
தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு 'பக்கோடா' கடை துவங்க உதவி
செய்யுமாறு ஸ்மிருதி இரானி மற்றும் மொஹ்சின் ராசாவுக்கு கடிதம்
எழுதியுள்ளார் அஷ்வின் மிஷ்ரா என்ற இளைஞர்.
உத்தரப்பிரதேச
மாநிலம் அமேதி தொகுதியில், பா.ஜ.க-வின் சமூக ஊடகக் குழுவின், முன்னாள்
தலைவராகப் பணியாற்றிய அஷ்வின் மிஷ்ரா, 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா'
திட்டத்தின் கீழ் தனக்குக் கடன் பெற்றுத் தருமாறு பா.ஜ.க., தலைவர்களுக்கு
கடிதம் எழுதிய சம்பவம் எதிர்க்கட்சியினர்க்கு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேச
மாநிலம் அமேதி தொகுதியில், பா.ஜ.க-வின் சமூக ஊடகக் குழுவின், முன்னாள்
தலைவராகப் பணியாற்றியவர் அஷ்வின் மிஷ்ரா.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
'பக்கோடா' விற்பவர்களை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் உரையில்
கவரப்பட்ட இவர், 'பக்கோடா' கடை துவங்குவதற்கான வேலையில் இறங்கியுள்ளார்.
போதிய பண வசதி இல்லாததால், 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தில் கடன் பெறுவதற்காக வங்கிகளை அணுகியுள்ளார்.
அவரின்
கடன் கோரிக்கைகளை வங்கிகள் நிராகரித்ததை அடுத்து, விரக்கியடைந்த அஷ்வின்
மிஷ்ரா, ஸ்மிருதி இரானி மற்றும் மொஹ்சின் ராசாவுக்குக் கடிதம்
எழுதியுள்ளார். 'பிரதான் மந்திரா முத்ரா யோஜனா' திட்டத்தின் மூலம் பல
லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் பிரதமர்
மற்றும் மந்திரிகள் பேசிவருகின்றனர்.
No comments:
Post a Comment