
பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என திமுக செயல்
தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த
பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.பேட்டியில் அவர் கூறியதாவது : எனது 50
ஆண்டு கால அரசியல் வாழ்வில் நெருக்கடி நிலை காலத்தை விட, கருணாநிதி தீவிர
அரசியலில் இல்லாத கடந்த ஓராண்டு தான் அதிக சுமையாக இருந்தது. முடிவெடுப்பது
எவ்வளவு பெரிய சுமை என்பதை இந்த ஓராண்டில் உணர்ந்து கொண்டேன்.குறுக்கு
வழியில் ஆட்சிக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. பா.ஜ.,வுடன் இனி எந்த
காலத்திலும் கூட்டணி கிடையாது. கடந்த கால தவறுகளில் இருந்து திமுக.,வை
மீட்டெகு்க விரும்புகிறேன். ஆன்மிகத்தையும் அரசியலையம் தனித்தனியாக பார்க்க
வேண்டிய நிலையில் நடிகர் ரஜினி அதனை தலைகீழாக்கப் பார்க்கிறார்.
அவரின் பார்வை நாட்டிற்கு நல்லதல்ல.ரஜினியின் ஆன்மிக அரசியல் மதசார்பின்மை
கொள்கைக்கு எதிரானது. சினிமா இல்லை அரசியல். கமலும், ரஜினியும் களத்திற்க
வரும் போது பார்க்கலாம். ஆர்.கே.நகர் தோல்வி திமுக.,வின் தோல்வியல்ல.
அது நமது தேர்தல் அமைப்பின் தோல்வி. ஜனநாயகத்தின் தோல்வி. அடுத்த தேர்தலில் நாங்கள் எதிர்கொள்ள கூடிய பெரிய எதிரி மதவியமும், பணநாயகமும் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அது நமது தேர்தல் அமைப்பின் தோல்வி. ஜனநாயகத்தின் தோல்வி. அடுத்த தேர்தலில் நாங்கள் எதிர்கொள்ள கூடிய பெரிய எதிரி மதவியமும், பணநாயகமும் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment