தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். அமீரகம்
அபுதாபியில் உள்ள நிறுவனத்தில் சீனியர் மார்க்கெடிங் மேலாளராகப் பணியாற்றி
வருகிறார். இவரது மூத்த மகன் அப்துல் வாஹித் (வயது 16). சென்னை வேலம்மாள்
சிபிஎஸ்இ பள்ளியில் கிரேடு 10 வகுப்பில் கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், அபுதாபி மலையாளி சமஜாம் அசோசியேஷன் சார்பில் தடகளப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அப்துல் வாஹித், ஓட்டப்போட்டி 100 மீட்டர், 200 மீட்டர், லாங் ஜம்ப் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தார். மேலும், போட்டிகளின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். வெற்றி பெற்ற இவருக்கு பதக்கங்கள், பாராட்டுச்சான்றிதழ், கேடயப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பட்டத்தை இந்தியன் சோஷியல் & கல்சுரல் சென்டர் சேர்மன் வழங்கினார்.

No comments:
Post a Comment