
தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்ட விழா நடத்த
அனுமதிஅளிக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள்
போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
டிடிவி.
தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர்
நூற்றாண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி கரூரில் தினகரன்
தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த முன்னாள் போக்குவரத்துத் துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் அனுமதி கோரி
இருந்தார்.
இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தை நாடி செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கெங்கமேடு சாலையில் மேம்பாலச்சுவர் மீது பொதுக்கூட்டத்திற்கான சுவர் விளம்பரம் செய்ய செந்தில்பாலாஜி முயற்சித்துள்ளார்.
இதனையறிந்து
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆட்கள் அங்கு கூடி
எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாக்குவாதத்தால் கெங்கமேடு சாலையில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் எம்ஜிஆர் விழாவிற்கு போலீசார்
அனுமதி கொடுக்காததை கண்டித்து செந்தில் பாலாஜி இன்று திடீரென சாலை மறியலில்
ஈடுபட்டார். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் செந்தில் பாலாஜியை
போலீசார் கைது செய்தனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment