
அரசியலில் மூத்த தலைவர்கள்தான்
முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே வசைபாடி கொண்டால்... என்று
ஆதங்கப்படுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். எதற்காக தெரியுங்களா?
தன்னை ஊழல் பேர்வழி எனக் கூறிய பா.ஜ., தேசியத்தலைவர் அமித்ஷாவை 'சிறைப்பறவை' என கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில்
சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, கர்நாடக முதல்வரும், மாநில காங்.,
தலைவருமான சித்தராமையாவுக்கும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும் இடையே
வார்த்தை போர் வலுத்து வருகிறது. இதில் அமித்ஷா, 'ஊழல் என்றால்
சித்தராமையா..
சித்தராமையா என்றால் ஊழல்' என கூறியிருந்தார்.
இதற்கு
பதிலடி தரும் வகையில், சித்தராமையா, அமித்ஷாவை 'சிறைப்பறவை' என
விமர்சித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பதிவில்
தெரிவித்ததாவது:
என் மீது
கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமித்ஷா ஆதாரத்தை காட்ட முடியுமா?
பொய்களையும், தந்திரங்களையும் நம்ப மக்கள் தயாராக இல்லை. ஒரு காலத்தில்
சிறைப்பறவையாக இருந்தவர், மற்றொரு சிறைப்பறவையை தனது கட்சி கர்நாடக
முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அரசியலில் நாகரீகம் என்பது இல்லாமல் போய்விட்டது.
source: m.dailyhunt.in
No comments:
Post a Comment