
காந்தியத் தத்துவங்களையும்
அவருடைய சித்தாந்தங்களையும் அவர் சொன்ன அஹிம்சையையும் சத்தியத்தையும்
உலகெங்கும் பரப்பிட சேலத்திலிருந்து குஜராத்தில் அமைந்துள்ள சபர்மதி
ஆசிரமம் வரை சுமார் 1,700 கி.மீட்டர் தூரம் நடைபயணத்தைத்
தொடங்கியிருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த 70 வயதுடைய காந்தியவாதி டாக்டர்.
ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தி.
இதுபற்றி டாக்டர் ஃப்ராங்க்ளின் ஆசாத்
காந்தியிடம் பேசியபோது, ''மக்கள் ஜாதி, மத இன மொழி பேதமின்றி ஒற்றுமையாக
ஒரே இறைவனின் பிள்ளைகளாக வாழ வேண்டும். பெண்கள் பயமின்றி வாழும் நாடு
இந்தியா என்ற நிலையை உருவாக்க வேண்டும். இந்திய துணைக்கண்டம் முழுவதும் மது
விலக்கை அமல்படுத்த வேண்டும்.
மக்கள் மனதில் மகாத்மா காந்திஜியின் உண்மை, அஹிம்சை என்ற கொள்கைகளையும் மது
மற்றும் போதைப் பொருள்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளையும்
வெளிப்படுத்தும்படியாக இந்தியாவில் உள்ள அத்தனை பள்ளிகளில் படிக்கும்
குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் வரைபடத்துடன்கூடிய பாடங்களை அந்தந்த மாநில
மொழியில் அச்சிட வேண்டும்.
ரோட்டில் திரிகின்ற நாய்களை
அறுவைசிகிச்சை மூலம் அதன் இனப் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திட
வேண்டும். நாய்களுக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கு அரசாங்கத்தில் பொருளாதாரம்
இல்லையென்றால் அதைக் கருணைக் கொலை மூலம் மரணமடையச் செய்தால் அது
மகிழ்ச்சியடையும். நாய்களும் மனிதர்களும் வேகமாகச் செல்லும் வாகனங்களில்
அடிப்பட்டு இறப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்ற கோட்பாட்டின்படி இந்திய மக்கள் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து
மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்'' என்பதை வலியுறுத்தியும் காந்தியின்
கொள்கை இல்லா அரசியல், உழைப்பு இல்லாத செல்வம், நேர்மை இல்லாத வியாபாரம்,
ஒழுக்கம் இல்லாத கல்வி, மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி, மனிதநேயம் இல்லாத
விஞ்ஞானம், தியானம் இல்லாத பக்தி ஆகிய ஏழு சமுதாயக் குற்றங்களைப் பரப்புரை
செய்யும் எங்கள் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். இந்தப் பயனத்தில் நான்,
சித்ரா கருப்பையா, கருப்பையா, கந்தசாமி ஆகிய 4 பேரும் செல்கிறோம்''
என்றார்.
No comments:
Post a Comment