கடந்த 2012ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி
நிர்பயா கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது போல், ஹரியானாவில் 15
வயது தலித் சிறுமி மிகக் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்து
கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பா.ஜனதா
கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக மனோகர் லால்
கட்டார் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தல் புகார்
ஹரியானா
மாநிலம், ஜிந்த் மாவட்டம், குருஷேத்திரா அருகே, புத்தகேரா கிராமத்தைச்
சேர்ந்த 10-ம் வகுப்பு(15 வயது)படிக்கும் தலித் சிறுமியை கடந்த சில
நாட்களாக காணவில்லை.
அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது நபர் அந்த சிறுமியை கடத்தி இருக்கலாம்
என்று அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த
சிறுமியின் தந்தை அதே கிராமத்தில் டெய்லராக பணி செய்து வருகிறார்.
அரைநிர்வாண உடல்
இந்நிலையில்,
புத்தகேரா கிராமத்துக்கு அருகே இருக்கும் கால்வாய் பகுதியில் அந்த சிறுமி
உடல் அரை நிர்வாணமாக கிடப்பதை மக்கள் நேற்று பார்த்தனர். இந்த தகவல்
அறிந்து, அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி
உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பலாத்காரம் கொலை
அந்த
தலித் சிறுமியின் உடலை உடற்கூறு செய்த டாக்டர்கள், அந்த சிறுமி பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார், அந்த சிறுமியின்
அந்தரங்க உறுப்புகள் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
அந்தரங்க உறுப்புகள் சிதைப்பு
இது
குறித்து ரோடக் அரசு மருத்துமனையின் தடவியல் துறை மருத்துவர்
எஸ்.கே.தத்தர்வால் கூறுகையில், “ அந்த சிறுமியின் உடலில் 19 காயங்கள்
இருக்கின்றன. அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் ஏதோ மர்ம பொருளை
நுழைத்து சிதைத்து இருக்கிறார்கள்.
மேலும், அந்த
சிறுமியின் தொண்டை பகுதியிலும் காயங்களும், அவளின் மார்புப்பகுதியிலும்
கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. மேலும், முகம், தலைப்பகுதியிலும் காயங்கள்
உள்ளன. யாரேனும் அந்த சிறுமியின் மார்புப்பகுதியில் அமர்ந்திருக்கலாம்
என்று கருதுகிறோம். இயற்கைக்கு மாறான மரணம், மற்றும் கூட்டுப்பலாத்காரம்
ெசய்து அந்த சிறுமி கொல்லப்பட்டு இருக்கிறாள்’’ எனத் தெரிவித்தார்.
குருஷேத்ரா
போலீஸ் எஸ்.பி. அபிஷேக் கார்க் கூறுகையில், “ இந்த சிறுமி கொலையில்
தொடர்புடையவர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் 4 சிறப்பு புலனாய்வு
படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிறுமியின் தந்தை சந்தேகிக்கும் 20 வயது
நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை’’ என்றார்.
பதற்றம்
இதற்கிடையே
அந்த சிறுமியின் உடலைப் பெற்று, இறுதிச்சடங்கு செய்ய பெற்றோர்
மறுத்துவிட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும், குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு தர வேண்டும், நிர்பயா நிதியில் இருந்து ரூ.50
லட்சம் இழப்பீடு தரக்கோரியுள்ளனர். சிறுமியை இழந்து தவிக்கும்
குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்று ஹரியானா அமைச்சர்
கே.கே.பேடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு
ஓடும் பஸ்ஸில், மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் ெசய்யப்பட்டு
கொல்லப்பட்டது போன்று இந்த சம்பவம் நடந்துள்ளதால், அந்த மாநிலத்தில் பெரும்
பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நன்றி : dailyhunt.in

No comments:
Post a Comment