அதிராம்பட்டினம், நவ.26
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த M.M.S பஷீர் அகமது (60). இவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், கடந்த நவ.5 ந் தேதி அவரது இல்லத்தில் காலமானார்.
இவரது மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்.எம்.எஸ் குடும்பத்தாரின் நெருங்கிய நண்பரும், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன், அதிராம்பட்டினம் மேலத்தெருவில் உள்ள மறைந்த M.M.S பஷீர் அகமது இல்லத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் வருகை தந்து, அவரது மூத்த மருமகன் எம்.எம்.எஸ் சம்சுதீன் மற்றும் எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் செயலரும், கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையருமாகிய ஏ. ராமலிங்கம், மறைந்த M.M.S பஷீர் அகமது இல்லத்திற்கு கடந்த வாரம் சனிக்கிழமை நேரில் வருகை தந்து, அவரது மூத்த மருமகன் எம்.எம்.எஸ் சம்சுதீன் மற்றும் எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment