திருமாவளவன் குறித்து கூறிய கருத்துகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன்
பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீதும் அவரது கட்சியின் மீதும் அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீதும் அவரது கட்சியின் மீதும் அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய மக்களின் கடுங்கோபத்திற்கு உள்ளாகியுள்ள பாஜக தனக்கு எதிராக
வரும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள இயலாமல், அந்தக் கருத்துகளுக்கு
கருத்துகளால் பதில் அளிக்காமல் தனிமனிதர்களைத் தாக்குவதும், வருமான வரி,
அமலாக்கத்துறை மூலம் அவர்களை மிரட்டுவதும் வாடிக்கையாகியுள்ளது.
இதற்கு
ஒருபடி மேலே சென்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருமாவளவனின்
ஆணித்தரமான கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் அவர் மீதும் விடுதலை
சிறுத்தைகள் கட்சி மீதும் அபாண்டமான அவதூறு பரப்பியுள்ளார்.
தமது
கட்சித் தலைவர் முதல் தொண்டர்கள் வரை செய்யும் கட்டப்பஞ்சாயத்தை
திருமாளவன்தான் செய்துவருகின்றார் என்று தமிழக பாஜக தலைவர் பேசியிருப்பது
வேடிக்கையானது. சமீபத்தில் ஒரு நகைச்சுவை நடிகரிடம் கட்டப்பஞ்சாயத்து
நடத்தி அதில் பாஜக நிர்வாகி மூக்குடைப்பட்டார் என்பதே இதற்குச் சரியான
எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் சமூக நீதி அரசியலை துணிச்சலுடன்
முன்னெடுத்திருக்கும் திருமாவளவனை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை மனிதநேய
மக்கள் கட்சி கண்டிக்கிறது. திருமாளவன் குறித்து தமிழிசை சவுந்தரராஜன்
கூறிய கருத்துகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'' என ஜவாஹிருல்லா
வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment