பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காத தமிழக
அரசைக் கண்டித்து, அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகே நேற்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள்
சங்கத்தினர்.
பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை
வழங்காத தமிழக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி
பேருந்து நிலையம் அருகே டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் நேற்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்
எலும்புக்கூடுகளை மாலையாக அணிந்து கொண்டு, கையில் மண்டை ஓடுகளை ஏந்தியவாறு
போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த
அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ இ.எ.ரத்தினசபாபதி பேசியது: பயிர்க்
காப்பீடுக்கான இழப்பீடு தொகையை வழங்குமாறு அமைச்சர்கள், அலுவலர்களிடம்
பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட நடவடிக்கை இல்லை. எனவே, அரசைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
தென்னிந்திய
நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு பேசியது:
டெல்லியில் போராட்டம் நடத்திய பிறகுதான் அனைத்து மாநில விவசாயிகளுக்கும்
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பயிர்க் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகையை 15
நாட்களுக்குள் வழங்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே
தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். நவ. 20-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில்,
அதிமுக (அம்மா அணி) மாவட்ட செயலாளர் இ.எ.கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment