ஹர்திக் படேல்
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு
படேல் சமுதாய தலைவர் ஹர்திக் படேல் உள்ளிட்டோருக்கு அந்த கட்சி அழைப்பு
விடுத்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பாரத்சிங் சோலங்கி அகமதாபாத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள படேல் சமுதாய தலைவர்
ஹர்திக் படேல், தாக்குர் சமுதாய தலைவர் அல்பேஷ் தாக்குர், தலித் சமுதாய
தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் என்று
அழைப்பு விடுக்கிறேன்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது
தேசியவாத காங்கிரஸ், எங்களுக்கு எதிராக மாறியது. எனினும் அந்த கட்சி
விரும்பினால் காங்கிரஸுடன் இணையலாம். வரும் தேர்தலில் மொத்தமுள்ள 182
தொகுதிகளில் 125 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றும்.
இவ்வாறு பாரத்சிங் சோலங்கி தெரிவித்தார்.
குஜராத்தில்
படேல் இனத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
என்று வலியுறுத்தி பெரும் போராட்டம் நடத்தியவர் ஹர்திக் படேல். இவரது
போராட்டத்தில் ஆயிரக்கணக்கான படேல் இனத்தவர்கள் பங்கேற்று குஜராத்
அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment