ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ்| கோப்புப் படம்.
குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பதை தேர்தல் ஆணையம்
தள்ளிப்போடுவது நல்லதல்ல என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பி சரத்
யாதவ் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில், நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என கடந்த 12-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 18-ம் தேதிக்குள், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், குஜராத் தேர்தல் தேதியை விரைவில் அறிவிப்பதாக கூறிய தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று போட்டி ஐஜத தலைவர் சரத் யாதவ் கூறியதாவது:
தேர்தல்
ஆணையத்தின் மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்நிலையில்
குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பதை தேர்தல் ஆணையம்
தள்ளிப்போட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் முதல் முறையாக இப்போதுதான்
நிகழ்ந்துள்ளது. இது நல்லதல்ல.
நமது அரசமைப்பு சட்டத்தின் பலமே
ஜனநாயகம். இதுவரையில் தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு
வந்துள்ளது. சிக்கல் மிக்க தருணங்களிலும் தேர்தல் ஆணையம் இதுவரையில்
நடுநிலையுடன் செயல்பட்டு வந்துள்ளது.
ஐக்கிய
ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் மெகா
கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதனால் அதிருப்தி
அடைந்த சரத் யாதவ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தனி அணியாக
செயல்பட்டு வருகிறார்கள். கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல்
ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஐஜத கட்சியின் (அதிருப்தி) உள்கட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 11-ல் நடைபெறும் என சரத் யாதவ் நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக
செய்தியாளர்களை சந்தித்த சரத் யாதவ், கட்சியின் இடைக்கால நிர்வாகிகள்
பட்டியலையும் வெளியிட்டார். இதன்படி, சோட்டு பாய் வசவா செயல் தலைவராகவும்,
அலி அன்வர் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். - பிடிஐ
No comments:
Post a Comment