குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி
போட்டியிடும் என்றும் மீதி இடங்களில் காங்கிரசை ஆதரிப்போம் என்றும்
அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நேற்று பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஓட்டுகள் பிளவுபடுவதை
எங்கள் கட்சி விரும்பவில்லை. எனவே, குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில்
சமாஜ்வாதி பலமாக இருக்கும் 5 தொகுதிகளில் போட்டியிடுவோம். மீதி
இடங்களில் காங்கிரசை ஆதரிப்போம்.
குஜராத் பேரவை தேர்தலில்
சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன். மற்ற
கட்சிகள் எங்களை அணுகினால் அவர்களுக்காகவும் பிரச்சாரம் செய்வேன்.
பாஜகவுக்கு எதிரான போராட்டம் பலவீனமடையக் கூடாது.
இவ்வாறு அகிலேஷ்
யாதவ் கூறினார். வழிபாட்டுத் தலங்களில் பிரதமர் நரேந்திர மோடியும்
முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் செல்வது குறித்து கேட்டதற்கு, ‘‘பள்ளி
நாட்களில் சுற்றுலாவின்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கு நானும்
சென்றுள்ளேன். தீபாவளியின் போது எனது குடும்பத்தாருடன் வழிபட்டுள்ளேன்’’
என்றார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடந்த உ.பி. தேர்தலில் மொத்தமுள்ள
403 தொகுதிகளில் காங்கிரஸ் 105 தொகுதிகளில் போட்டியிட்டு மீதி இடங்களில்
சமாஜ்வாதியை ஆதரித்தது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment