பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹிம
அன்புடையீர் : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட
நாட்களிலே அல்லாஹ்வின் திருநாமத்தை இவர்கள் துதிப்பார்கள். அதிலிருந்து
நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள். ( அல்குர் ஆன்
22:28 )
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது
குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், ஆகிய அனைத்தையும்
பங்கிட்டு தர்மம் செய்யும் படியும் உரிப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்ககூடாது
என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள்
தனியாக கொடுப்போம். அறிவிப்பாளர் : அலி (ரலி) நூல்:புகாரி 1717.
கடந்த மூன்று வருடமாக நமது முஹல்லாவில் குர்பானித் தோல் வசூல் செய்து வருகிறோம் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்தவை. நமது மஹல்லாவில் கிடைக்கும்
குர்பானி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து நமது மஹல்லாவில் உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும்
விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கி வருகிறோம்.
அல்லாஹ்வின் உதவியால் சென்ற ஆண்டு போன்று இந்த ஆண்டும் வருகின்ற
ஹஜ் பெருநாள் அன்று நமது மஹல்லாவில் சேரும் தோல்களை வசூல் செய்து. வருகின்ற
ஆண்டும் தொடர்ந்து உதவி தொகையை வழங்க திட்டம் தீட்டியுள்ளோம். நமது மஹல்லாவாசிகள் அனைவரும்
கடந்த வருடம் போல் இந்த வருடமும் நமது TIYA நிர்வாகிகளிடம் உங்களின்
குர்பானி தோல்களை வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
என்றும் உங்கள் அன்புடன்
அமீரகம் மற்றும் அதிரை
TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment